- அற்ப மனமுடையோர் பழிவாங்கும் பண்புடையோர்.
- உண்ணாமல் கேட்டது உறவு கேளாமல் கேட்டது கடன்.
- பனி தேடினால் கிடைப்பதில்லை கிடைத்தாலோ நிலைப்பதில்லை.
- ஆரோக்கியம் இல்லாமல் செல்வம் இல்லை.
- கடன் வாங்கிய பொருளின் விலை தெரியாது.
- இளமையில் வரும் அடக்கம் பொன் மலர் போல மணம் வீசும்.
- இட்டு வைச்ச வேளாண்மையும் கொடுத்து வைத்த கடனும் இல்லாமல் போகாது.
- உழைப்பை நாம் தேடிச்செல்ல வேண்டும் அதிஸ்டம் நம்மை தேடிவரும்.
- அதிகமாக ஆசைப்படுபவன் அதிகம் கவலைப்படுகிறான்.
- வாதத்துக்கு மருந்துண்டு பிடிவாதத்துக்கு மருந்துண்டா?
- வெய்யிலில் தான் தெரியும் நிழலின் அருமை.
- இராகு திசையில் வாழ்ந்தவனுமில்லை இராய திசையில் கெட்டவனுமில்லை.
Wednesday, June 16, 2010
அர்த்தமுள்ள வாக்கியங்கள் [5]
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல தொகுப்பு நண்பா..
ReplyDeleteபனி - குளிர்
பணி - வேலை
"ஆம்" வருகைக்கு நன்றி, குணசீலன்.
ReplyDelete