- இன்பங்கள் சோடியாக வருவதில்லை துன்பங்கள் தனித்து வருவதில்லை.
- கொடுப்பதை தடுப்பவன் குலம் நாசமடையும்.
- காரியம் கடந்தபின் யோசனை சொல்வது அறுவடைக்குப்பின் மழை பெய்தாற்போலாகும்.
- பணம் அறிவாளிக்கு தொண்டு செய்கிறது முட்டாளை ஆட்சிசெய்கிறது.
- நாம் அதிகம் செய்தால் அதிகம் பெறமுடியும்.
- ஒரு மரத்தின் நிழலில் தங்குவதற்கு அதன் கிளைகளை உடைப்பது கொடுமையாகும்.
- கொட்டினால்தான் தேள் கொட்டாவிட்டால் புள்ளப்பூச்சி.
- மனிதர்கள் நேசமாய் உள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிக்கும்.
- நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னை தேடி வரும்.
- உள்ளத்தை மற்றவர்களுக்கு கொடு வேண்டியவை தானாகவே சேரும்.
- சாக துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்.
- பண்பும் குணமும் ஒன்று பட்டால் மனிதன் அந்தஸ்து உயரும்.
- சாகும் வரையில் மனிதன் வாழ்க்கையை கற்கிறான்.
Wednesday, June 23, 2010
இன்பமாய் வாழ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment