Showing posts with label பொன் மொழிகள். Show all posts
Showing posts with label பொன் மொழிகள். Show all posts
Wednesday, June 26, 2013
Thursday, March 29, 2012
வாழ்க்கையில் முன்னேற ஏழு வழிகள்
இவைகளை எங்கேயோ வாசித்த ஞாபகம் (வேறென்ன படித்ததில் பிடித்ததுதான்)
நன்மை தரும் 7 விடயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்தி;லும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் 7 விடயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான 7 விடயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள் 6) தினமும் உற்சாகமாக வரவேற்க்கதயாராகுங்கள் 7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள் கவனிக்க 7 விடயங்கள் 1) கவனி உன் வார்த்தைகளை 2) கவனி உன் செயல்களை 3) கவனி உன் எண்ணங்களை 4) கவனி உன் நடத்தையை 5) கவனி உன் இதயத்தை 6) கவனி உன் முதுகை 7) கவனி உன் வாழ்க்கையை |
Wednesday, June 8, 2011
வாழ்க்கை
- வாழ்க்கை ஒரு சவால் - அதனைச் சந்தியுங்கள்
- வாழ்க்கை ஒரு பரிசு - அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்
- வாழ்க்கை ஒரு சோகம் - அதனை கடந்து வாருங்கள்
- வாழ்க்கை ஒரு சாகச பயணம் - அதனை மேற்கொள்ளுங்கள்
- வாழ்க்கை ஒரு துயரம் - அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
- வாழ்க்கை ஒரு கடமை - அதனை நிறைவேற்றுங்கள்
- வாழ்க்கை ஒரு விளையாட்டு - அதனை விளையாடுங்கள்
- வாழ்க்கை ஒரு வினோதம் - அதனை கண்டறியுங்கள்
- வாழ்க்கை ஒரு பாட்டு - அதனை பாடுங்கள்
- வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்
Saturday, February 5, 2011
மனிதன் மனிதனாக 18 விடயங்கள்
- மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய் , தந்தை
- மிக மிக நல்ல நாள் - இன்று
- மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
- மிகவும் வேண்டியது - பணிவு
- மிகவும் வேண்டாதது - வெறுப்பு
- மிகப்பெரிய தேவை - நம்பிக்கை
- மிகக் கொடிய நோய் - பேராசை
- மிகவும் சுலபமானது - குற்றம் காணுதல்
- கீழ்த்தரமான விடயம் - பொறாமை
- நம்பக்கூடாதது - வதந்தி
- ஆபத்தை விளைவிப்பது - அதிகம் பேசுதல்
- செய்யக் கூடாதது- நம்பிக்கைத் துரோகம்
- செய்யக் கூடியது - உதவி
- விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
- உயர்வுக்கு வழி - உழைப்பு
- நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு
- பிரியக் கூடாதது - நட்பு
- மறக்கக் கூடாதது - நன்றி
Wednesday, July 14, 2010
இன்பமாய் வாழ [3]
- கற்பிக்க துணிந்தவன் கற்றலை நிறுத்தக்கூடாது.
- வீண் பேச்சுப் பேசுபவர்களின் பேச்சை ஆமோதித்தால் அடுத்த அவதுறு உன்மேல் தான்.
- இன்று என்பதை பற்றிப் பிடித்துக்கொள் ஏனென்றால் நாளை என்பது விதியின் கையில் உள்ளது.
- இன்றைய ஒரு மணி நேரம் நாளைய இரண்டு மணி நேரத்துக்குச் சமன்.
- விரைவில் பெறுவது விரைவில் செலவழிந்துவிடும்.
- உறவினர்களை அடிக்கடி சந்தித்துவிட்டு வரலாம் ஆனால் அவர்களுடனையே வாழ முடியாது.
- மகிழ்ச்சியை வயலின் பழகுவது போல பழகிக்கொள்ள வேண்டும்.
- ரகசியமாக பெசவிரும்புவது பயத்தையே குறிக்கும்.
- பட்டினியால் சாக நேர்ந்தாலும் பகுத்தறிவை அடகு வைக்காதே.
- உன்னுடைய ரகசியத்தை மற்றவர் காக்க வேண்டுமானால் நீ முதலில் காத்துக் கொள்.
Wednesday, July 7, 2010
இன்பமாய் வாழ [2]
- கூப்பிட்டு கடன் கொடுத்தால் கும்பிட்டு வாங்க வேண்டும்.
- நல்லது என்பதை தெரிந்தும் செய்யாமல் இருப்பது கோழைத்தனம்.
- தைரியம் உள்ளவர்களுக்கு அதிஸ்டம் கை கொடுக்கிறது.
- அறிவும், அன்பும், நவினுனர்ச்சி மற்றும் இரக்கமும் ஒருவனை தெய்வப்பிறவியாக்கும்.
- எவனொருவன் எல்லோரிடமும் கற்றுக்கொள்கிறானோ அவனே அறிவாளி.
- வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமை இல்லாதவன் ஏழையிலும் ஏழை.
- நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள் எதிகாலம் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும்.
- செல்வம் சேர்த்து சிறப்பு வழியில் செலவு செய்.
- எட்டாத கனிக்கு கொட்டாவி விடாதே.
- பொறுமை கடலினும் பெரியது.
- அன்பு என்பது முற்றிலும் செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சிக்கடல்.
Thursday, July 1, 2010
Wednesday, June 23, 2010
இன்பமாய் வாழ
- இன்பங்கள் சோடியாக வருவதில்லை துன்பங்கள் தனித்து வருவதில்லை.
- கொடுப்பதை தடுப்பவன் குலம் நாசமடையும்.
- காரியம் கடந்தபின் யோசனை சொல்வது அறுவடைக்குப்பின் மழை பெய்தாற்போலாகும்.
- பணம் அறிவாளிக்கு தொண்டு செய்கிறது முட்டாளை ஆட்சிசெய்கிறது.
- நாம் அதிகம் செய்தால் அதிகம் பெறமுடியும்.
- ஒரு மரத்தின் நிழலில் தங்குவதற்கு அதன் கிளைகளை உடைப்பது கொடுமையாகும்.
- கொட்டினால்தான் தேள் கொட்டாவிட்டால் புள்ளப்பூச்சி.
- மனிதர்கள் நேசமாய் உள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிக்கும்.
- நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னை தேடி வரும்.
- உள்ளத்தை மற்றவர்களுக்கு கொடு வேண்டியவை தானாகவே சேரும்.
- சாக துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்.
- பண்பும் குணமும் ஒன்று பட்டால் மனிதன் அந்தஸ்து உயரும்.
- சாகும் வரையில் மனிதன் வாழ்க்கையை கற்கிறான்.
Thursday, June 17, 2010
அர்த்தமுள்ள வாக்கியங்கள் [6]
- பத்தினி சொன்னால் பத்தி எரியும்.
- எடுப்பவன் கைப்பிள்ளையாக இராதே
- அதிஷ்டமானவன் மண்ணை தொட்டாலும் பொன்னாகும்.
- கடவுள், பெற்றோர் மற்றும் ஆசான் இவர்களுக்கு ஒரு போதும் கைமாறு செய்ய முடியாது
- தரித்திரத்தை போலவே பொருளும் நண்பர்களை பிரித்துவிடும்.
- உன்னுடைய எண்ணங்களை கவனி அவை உன் சொற்களாகும்.
- ஒரு சிறிய ஆத்திரம் சில நேரங்களில் பெரிய திட்டங்களை குலைத்துவிடும்.
- உறவினர்களார் வெறுக்கப்படுபவன் பிறராலும் ஒதுக்கப்படுனான்.
- அனுபவம் வாய்ந்த மனிதனை நண்பனாக பெறுதல் நல்ல நட்பாகும்.
- கையில் காசு இருந்தால் தாய் தந்தை தவிர எது வேண்டுமானாலும் வாங்கலாம்.
- கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது.
- கண்ணால் கற்றுக்கொண்டதை விட ஒருவன் காதால் அதிகம் கற்கிறான்.
- மாத பிதா செய்தது மக்கள் தலையில்.
- வாழ்க்கையை இறைவன் வாழ்வதற்கே கொடுத்துள்ளான்.
Wednesday, June 16, 2010
அர்த்தமுள்ள வாக்கியங்கள் [5]
- அற்ப மனமுடையோர் பழிவாங்கும் பண்புடையோர்.
- உண்ணாமல் கேட்டது உறவு கேளாமல் கேட்டது கடன்.
- பனி தேடினால் கிடைப்பதில்லை கிடைத்தாலோ நிலைப்பதில்லை.
- ஆரோக்கியம் இல்லாமல் செல்வம் இல்லை.
- கடன் வாங்கிய பொருளின் விலை தெரியாது.
- இளமையில் வரும் அடக்கம் பொன் மலர் போல மணம் வீசும்.
- இட்டு வைச்ச வேளாண்மையும் கொடுத்து வைத்த கடனும் இல்லாமல் போகாது.
- உழைப்பை நாம் தேடிச்செல்ல வேண்டும் அதிஸ்டம் நம்மை தேடிவரும்.
- அதிகமாக ஆசைப்படுபவன் அதிகம் கவலைப்படுகிறான்.
- வாதத்துக்கு மருந்துண்டு பிடிவாதத்துக்கு மருந்துண்டா?
- வெய்யிலில் தான் தெரியும் நிழலின் அருமை.
- இராகு திசையில் வாழ்ந்தவனுமில்லை இராய திசையில் கெட்டவனுமில்லை.
Saturday, June 12, 2010
அர்த்தமுள்ள வாக்கியங்கள் [4]
- போதுமென்று நீ இருந்தால் சுகமாக வாழ போதுமானது உன்னிடம் உள்ளது.
- உண்மையை நீ அழித்தால் அது உன்னையே அழிக்கும்.
- எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்.
- நாகைத்து இகழ்வோரை நாயேன நினைத்து ஒதுங்கு.
- தண்ணீர் பந்தல் வைத்தவர்கள் தாக விடாமல் வருத்த மாட்டார்கள்.
- அழகான பெண்ணை விட அன்பான பெண் மேலானவள்.
- ஈட்டி எட்டிய மட்டும் பாயும் பணம் பாதாளம் வரை பாயும்.
- சத்தியம் சக்கரைப் பொங்கல் பொய் புளியோதரை
- வெள்ளம் வருமுன் அணை போடு உள்ளம் கெடுமுன் துணை தேடு.
- நண்பன் எனப்படுபவன் இரு உடம்புகளின் ஆண்மா ஆவான்.
Friday, June 11, 2010
அர்த்தமுள்ள வாக்கியங்கள் [3]
- சிரிப்பதை விடக் கோபமடைய அநேகத் தசைகள் தேவை கொபமடைவதை விட சிரிப்பது எளிது.
- வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிபவனுக்கு கொடு.
- அரைப்பவன் அரைத்தால் அடுப்புச் சாம்பலும் மருந்தாகும்.
- உண்மை உள்ள இடத்தில் உழைப்பும் இருக்கும்.
- அன்பு தன்னையே கொடுக்கும் அது வாங்கப்படுவது இல்லை.
- ஓர் நண்பனின் கண்ணைப்பர் பார் ஓர் எதிரியின் காலைப் பார்.
- கடவுள் ஒரு கதவை மூடி நுறு கதவை திறக்கிறான்.
- பத்தாளு வேலை ஒரு சித்தளால் முடியும்.
- கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
- அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
Thursday, June 10, 2010
அர்த்தமுள்ள வாக்கியங்கள் [2]
- மன நிறைவுடையவனை எதுவுமே கெடுதல் செய்யாது.
- நல்லவர் நட்பு நலமே பயக்கும் தீயவர் நட்பு திறனை அழிக்கும்.
- உணர்ச்சியை அடக்கினால் ஆத்மாவின் பலம் அதே விகிதத்தில் வாழ்கின்றது.
- எரியிரத்தை இழுத்தால் கொதிக்கிறது தானே அடங்கும்.
- உழுதவன் கணக்கு பார்த்தல் உழவு கோலும் மிஞ்சாது.
- மலை குலைந்தாலும் மனிதன் நிலை குலையக்கூடாது.
- இலக்கியமே உயிராகவும் எழுத்தே சுவாசமாகவும் கொள்பவன் கலைஞன்.
- எருது நோவை காக்கை அறியுமா.
- கருவாடு மீனாகாது கறந்த பல் மடி ஏறது.
- ஆக்கி அரைத்துப்போட்டவள் அதிகாரம் செய்யத்தான் செய்வாள்.
அர்த்தமுள்ள வாக்கியங்கள் [ 1]
- மகிழ்ச்சி என்ற பெரிய பழத்தை விட நம்பிக்கை என்ற சிறிய விதை சிறந்தது.
- சிறிய கிளையாக இருக்கும் போதே விளைப்பது நல்லது.
- கண்ணால் காணாத கடவுளை காட்டுபவர்கள் மாதா பிதா குரு.
- உண்மையாக நடப்பவனுக்கு உலகமே எதிரிதான்.
- தள்ளாடாமல் பெரும் பாரம் தாங்குபவனே வலிமையுடையவன்.
- சுடர் விளக்காயினும் தூண்டுகோல் கோல் ஒன்று தேவை.
- நின்று கொடுத்த கடனை பணிந்து போய் தான் வசூலிக்க வேண்டும்.
- பாத்திரம் அறிந்து பிச்சை கொடு கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு.
- வீணையின் நாதன் விரல் நுணியில்.
- ஆண்டி மகன் ஆண்டியானால் நேரமறிந்து நேரமறிந்து சங்கு ஊதுவான்.
Subscribe to:
Posts (Atom)














