Tuesday, July 6, 2010

இணையம் (internet) 2009

"இணையம் 2009" என்பது ஒரு பிந்திய செய்திதான். அனாலும் இத்தகவல்களில் சில  எனக்குப் புதியவையே? 2009 ஆம் ஆண்டின் சராசரிகளை வைத்துக்கொண்டு 2010 ஆம் ஆண்டை ஓரளவுக்கேனும் அனுமானித்துக்கொள்ள முடியும். இதோஅதற்கான ஒரு அலசல்.

2009 அம் ஆண்டில் வலைப்பூக்களின் எண்ணிக்கை 126 மில்லியன் ஆகவும் 27.3 மில்லியன் tweets பயனாளர்களும் இருந்திருக்கிறார்கள்.அத்துடன் Facebook பாவனையாளர்களின் எண்ணிக்கை 350 மில்லியன் ஆகவும், ஒவ்வொரு நாளும் 50 வீத பாவனையாளர்கள் facebook கை log in செய்கிறார்கள். 

மின்னஞ்சல்
  • 90 ட்ரில்லியன் (trillion) மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
  • 247 பில்லியன் (billion) மின்னஞ்சல்கள் சராசரியாக ஒரு நாளில் அனுப்பப்பட்டிருக்கின்றன.
  • 1.4 பில்லியன் (billion) மின்னஞ்சல் பாவனையாளர்கள் 2009 வரை. 

  • 100 மில்லியன் (million) புதிய மின்னஞ்சல் பாவனையாளர்கள் 2009 ஆம் ஆண்டிலிருந்து.
  • 200 பில்லியன் (billion) சராசரியாக ஒரு நாளில்  ஸ்பாம் (spam) மின்னஞ்சல்கள்.



 வலைத்தளங்கள் 
  • 234 மில்லியன் (million) வலைத்தளங்கள் 2009 ஆம் ஆண்டு வரை.
  • 47 மில்லியன் (million) வலைத்தளங்கள் 2009 இல் புதிதாக இணைந்தவை.

 
 இணைய பாவனையாளர்கள்

2009 இல் 1.73 பில்லியன் (billion) பேர் உலக அளவில் இணையத்தை பயன்படுத்தி இருக்கின்றார்கள். இதில் ஆசியாவில் 738,257,230 பெரும் ஐரோப்பாவில் 418,029,796 பெரும் வட அமெரிக்காவில் 252,908,000 பெரும் ஆபிரிக்காவில் 67,371,700 பெரும் அவுஸ்ரேலியாவில் 20,970,490 பெரும் இணையத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 
  படங்கள் (Images)
  • 4 பில்லியன் (billion) படங்கள் Flickr இல் சேர்க்கப்பட்டுள்ளது (2009 இல்).
  • 2.5 பில்லியன் (billion) படங்கள் ஒவ்வொரு மாதமும் Facebook கில் upload செய்யப்பட்டுகின்றன.
  • 30 பில்லியன் (billion) படங்கள் ஒவ்வொரு வருடமும்  upload செய்யப்பட்டுகின்றன.

வீடியோ(Video)
  • 1 பில்லியன் (billion)  வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் YouTube பில் இணைக்கப்படுகின்றன.
  • 12.2 பில்லியன் (billion) வீடியோக்கள் ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவில்YouTube பில் இணைக்கப்படுகின்ற.
இவற்றுடன் சேர்த்து மேலதிக தகவலாக, 148,000 புதிய கணனிகள் ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment